கோவையை அடுத்த வெள்ளக்கிணறு மாசாணியம்மன் நகரில் கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் புதிய தார்சாலை போடப்பட்டது. ஆனால் சாலையை தரமாக போடாததால், பல இடங்களில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சில இடங்களில் பெரிய பள்ளங்களும் ஏற்பட்டு உள்ளன. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த சாலையை தரமாக அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.