கோவையை அடுத்த வெள்ளக்கிணறு சவுடாம்பிகை நகர், ராகவேந்திரா கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன. பணிகளை விரைந்து முடித்து பள்ளங்களை மூடவில்லை. இதனால் மழை பெய்தால் அங்குள்ள சாலைகள் சேறும், சகதியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிரமப்படுகிறார்கள். எனவே பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்.