வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2025-05-18 09:41 GMT

அரியலூர்-செந்துறை சாலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் நுழைவுவாயில் முன்புள்ள சாலையில் வேகத்தடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாலையில் செல்பவர்களும், மருத்துவமனையின் உள்ளே செல்பவர்களும் மோதிக்கொள்ளும் சூழல் நிலவி வருகிறது. மேலும் இந்த சாலையில் செல்லும் வாகனங்களில் வேகமாக செல்வதால் சாலையை கடக்கும் பொதுமக்கள் பலரும் அச்சப்படுகின்றன. எனவே இந்த சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டால் அனைத்து தரப்பு பொதுமக்களும் அச்சமின்றி செல்ல முடியும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்