மொடக்குறிச்சி அருகே சின்னியம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் செல்லும் தார்சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சாலையை சீரமைக்கும் பணியை தொடங்கினர். ஆனால் பாதியிலேயே விட்டுவிட்டனர். அதிலும் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி குண்டும், குழியுமான பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் சிரமமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?