குண்டும் குழியுமான சாலை

Update: 2025-05-11 11:55 GMT

செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சிறிதளவு மழை பெய்தாலும், சாலையில் உள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி விடுகிறது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு பள்ளம் இருப்பது தெரியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்