செங்கல்பட்டு மாவட்டம், பொழிச்சலூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சாய்பாபா கோவில் அருகில் உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. சிறிது மழை பெய்தாலும், சாலையில் மழைநீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்ககும் அபாயம் உள்ளது. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.