அந்தியூர் அருகே உள்ள மூங்கில்பட்டி-கீழ்வானி மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் வரும் இணைப்பு சாலை கடந்த பல ஆண்டுகளாக ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த வழியாக இருசக்கர வாகனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இந்த வாகனங்களில் இருந்து புழுதி வாரி தூற்றுவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வருவார்களா?