விழுப்புரம் அடுத்த சிந்தாமணி ஓம்சக்தி நகர் பகுதியில் உள்ள சாலை கரடு முரடாக காட்சியளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.