நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் உயரமான மரங்கள் உள்ளன. இந்த மரங்களின் கிளைகள் மழை நேரங்களில் முறிந்து கீழே விழுகின்றன. சில மரக்கிளைகள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மிகவும் தாழ்வாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தேசிய போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் காணப்படம் மரக்கிளைகளை வெட்டி அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.