வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-03-30 18:20 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் இருந்து மேட்டூர் ரோடு செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் வாய்ப்புள்ளது. எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்