அரியாங்குப்பம் போலீஸ் நிலையம் அருகில் இருந்து மணவெளி, ஓடைவெளி கிராமங்கள் வழியாக சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரைக்கு செல்லும் மெயின் ரோடு உள்ளது. இந்த சாலை பல்வேறு இடங்களில் சேதமடைந்து, குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து சாலையை சீரமைக்க வேண்டும்.