ஈரோடு அகில்மேடு 7-வது வீதியில் உள்ள ரோடு ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. அந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ரோடு மோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகளும் கடும் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். எனவே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.