வேகத்தடை குறித்த எச்சரிக்கை

Update: 2025-03-16 16:18 GMT

 அந்தியூர் அருகே அத்தாணி ரோட்டில் உள்ள புதுமேட்டூர், சின்னத்தம்பிபாளையம், தோப்பூர் ஆகிய ஊர்களில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் இரவில் ஒளி பிரதிபலிப்பான்கள் பதிக்கப்படவில்லை. மேலும் வேகத்தடை உள்ளது என்று எச்சரிக்கை பலகையும் வைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக வேகமாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எச்சரிக்கை பலகை வைக்கவும், ஒளி பிரதிபலிப்பான்கள் பதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்