பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஜே.ஆர்.டி. காமாட்சிநகர் 3-ம் பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்கு தூத்துக்குடி பைபாஸ் சாலையில் இருந்து சிறிது தூரத்துக்கு சாலை வசதி உள்ளது. பின்னர் மண் சாலையே உள்ளதால், மழைக்காலத்தில் சேறும் சகதியுமாக மாறி விடுகிறது. எனவே அங்கு சாலை அமைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?.