பாதசாரிகள் அவதி

Update: 2025-03-09 08:31 GMT

சீயோன்புரம் பகுதியில் அத்திக்கடை கால்வாய் சாலை செல்கிறது. இந்த சாலையை சீரமைக்க பல மாதங்களுக்கு முன் தோண்டப்பட்டது. ஆனால், அதன்பிறகு சாலையை சீரமைக்கவில்லை. இதனால், சாலையில் நடந்து செல்லும் முதியோர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகளும் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கிடப்பில் போடப்பட்டுள்ள சாலைப்பணியை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.


மேலும் செய்திகள்