விக்கிரவாண்டி அருகே பெரியதச்சூர்- எசாலம் செல்லும் சாலை பலத்த சேதமடைந்துள்ளது. சாலை பள்ளங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி சிக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.