கீழ்வாணி இந்திரா நகரில் இருந்து மேவானி செல்லும் சாலை முற்றிலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகவும் கரடு முரடாக காணப்படுகிறது. பவானி, ஆப்பக்கூடல், கூத்தம்பூண்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலை வழியாக தான் கோபி செல்கிறார்கள். சாலை பழுதடைந்துள்ளதால் கடும் சிரமப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.