செங்கல்பட்டு மாவட்டம், பம்மல் இந்துஸ்தான் லீவர் காலனி, ஜெயஜீவன் ராம் தெருவில் உள்ள சாலை ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இந்த பகுதி மிகவும் முக்கியமான பகுதி என்பதால் தினமும் பரபரப்பாக காணப்படும். காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி குழந்தைகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால் சாலை ஆக்கிமிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.