புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா சூரியூர் பஞ்சாயத்து எழுவம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து ஆதிதிராவிடர் காலனி செல்லும் சாலை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போடப்பட்டது. ஆனால் தற்போது சாலை சேதமடைந்த குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.