கன்னியாகுமரி-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடி சந்திப்பில் இருந்து கோட்டையடி கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாய் மேல்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இருபுறங்களிலும் விபத்து தடுப்பு பக்கச்சுவர் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பாலத்தில் இருபுறங்களிலும் பக்கச்சுவர் அமைக்கப்பார்களா?
-ராம்தாஸ், சந்தையடி.