மொடக்குறிச்சி அருகே முகாசி அனுமன்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட அஞ்சுராம்பாளையத்தில் இருந்து சென்னிபாளி மைலாடி வரை செல்லும் 1 கி.மீ. தூர தார்சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. தட்டுத்தடுமாறி சென்று வருகின்றனர். இதனால் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.