அரசூர் பகுதியில் பெய்த பெஞ்ஜல் புயல் மழை காரணமாக அப்பகுதியில் சாலை பலத்த சேதமடைந்தன. இதனை இதுவரை சரிசெய்யாததால் அப்பகுதி வாகனஓட்டிகள் சர்வீஸ் சாலையின் குறுக்கே ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் நெடுஞ்சாலையில் தடுப்புக்கட்டை அமைப்பதோடு சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.