மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கூடலூர் நகராட்சி 25-வது வார்டு பகுதியில் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள சர்வீஸ் சாலையில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. மேலும் சாலை சீராக இல்லை. இதனால் அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக வந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.