கோவை அருகே பட்டணம் ஏ.எஸ். நகரில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அந்த சாலையில் சுலபமாக நடந்து செல்லவோ, வாகனத்தில் செல்லவோ முடிவது இல்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் தினமும் அந்த சாலையை பயன்படுத்த அல்லல்படும் நிலை உள்ளது. மேலும் சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.