விபத்து தடுப்பு சுவர் தேவை

Update: 2025-01-26 08:54 GMT

நாகர்கோவில்-கன்னியாகுமாரி அகல ரெயில் பாதையில் கரும்பாட்டூரில் லெவல் கிராஸிங் உள்ளது. இந்த பகுதியில் சாலையோரமாக குறைந்த தூரம் விபத்து தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் மேற்கு புறத்தில் ஒரு குறுகிய கால்வாய் சுமார் 6 அடி ஆழத்தில் உள்ளது. சாலையில் செல்லும் வாகனங்கள் கால்வாயில் விழுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே, அங்கு அமைக்கப்பட்டு இருக்கும் விபத்து தடுப்பு சுவரை சாலையோரத்தில் குறைந்தது 15 அடி தூரம் நீட்டிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்