கோவை-பொள்ளாச்சி பிரதான சாலையில் சிட்கோ நுழைவாயிலில் இருந்து மதுக்கரை மார்க்கெட் சாலையை இணைக்கும் சாலையின் மட்டமும், மழைநீர் வடிகால் செல்லும் பாதையின் மட்டமும் கிட்டதட்ட 4 அடிக்கும் மேல் உள்ளது. இதனால் அந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறது. இதனால் சுந்தராபுரம் சென்று மதுக்கரை மார்க்கெட் சாலையை அடைய வேண்டிய சூழல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசலும், நேர விரயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு அந்த சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.