சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதிக்கு உட்பட்ட சில தெருக்களில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எனவே அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.