கடுக்கரை அருகே நைனார்தோப்பு சிவன் கோவில் முதல் திடல் கிராமம் வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையை சீரமைக்க பணிகள் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி கிடப்பில் போடப்பட்ட சாலைப்பணியை விரைந்து சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.