விக்கிரவாண்டியில் உள்ள வராக ஆற்றில் கட்டப்பட்டிருந்த பழைய பாலம் பெஞ்ஜல் புயல் மழையில் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த பெரும் அச்சமடைந்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் நெடுந்தூரம் சுற்றிச்செல்லும் நிலை உருவாகியுள்ளது. எனவே வாகனஓட்டிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பாலத்தை விரைந்து சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.