அந்தியூர் அருகே உள்ள நகலூர் புதூரில் இருந்து ஜீவா செட் செல்லும் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. மழை காலத்தில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.