மண்சாலை சீரமைக்கப்படும்

Update: 2024-12-08 14:16 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் வள்ளலார் நகர் ஸ்டாலின் 7-வது தெருவில் மண்சாலை உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த மண்சாலை சீரமைக்காமல் குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், சிறிய மழை பெய்தாலே மழைநீர் ஆங்காங்கே தேங்கி விடுகிறது. இதனால் அதிகஅளவு துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதி வழியாக பள்ளி செல்லும் மாணவ-மாணவியர் இதை கடந்து செல்ல முடியாத அவல நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் மண்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்