அந்தியூர் பஸ் நிலையத்தில் இருந்து சத்தி ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையம் வரை ரோட்டின் நடுவே தடுப்புக்கம்பி உள்ளது. இந்த சாலை வழியாக கோபி, சத்தியமங்கலம், மேட்டூர், ஈரோடு போன்ற ஊர்களுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. தடுப்புக்கம்பி உள்ளதால் சாலை குறுகலாக காணப்படுகிறது. எதிரேதிர் வரும் வாகனங்கள் ஒதுங்க முடியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த சாலையை அகலப்படுத்தவோ அல்லது தடுப்புக்கம்பிகளை அப்புறப்படுத்தவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?