கோவை மாநகராட்சி 88-வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் ேஜ.ஜே. நகர் 2-வது வீதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது. அங்கு மழைநீர் தேங்கி உள்ளது. அதில் கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. மேலும் வாகனங்களில் செல்லும்போது, சாலையில் உள்ள பள்ளத்தால் பழுதாகி விடுகிறது. எனவே அந்த சாலையை சீரமைப்பதோடு மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.