சாலையில் பள்ளம்

Update: 2024-11-24 18:05 GMT

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டத்தை சேர்ந்தது ஓமாந்தூர். இங்கு சப்பாணி கருப்பு அய்யனார், பிடாரியம்மன், அன்ன காமாட்சியம்மன், மாசி பெரியண்ணன் ஆகிய கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவில்களுக்கு பக்தர்கள் முசிறி பகுதிகளில் இருந்து புலிவலம், ஓமாந்தூர் சாலை வழியாக வந்து செல்கின்றனர். மேலும் புத்தனாம்பட்டியில் இருந்து பொதுமக்கள் முசிறியில் இருக்கும் ஒன்றிய அலுவலகத்திற்கு செல்வதற்கும் ஓமாந்தூர்- புலிவலம் சாலை வழியாக சென்று வருகிறார்கள். தற்போது இந்த சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. அந்த பள்ளத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையில் பெரிய அளவில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்