குண்டும், குழியுமான சாலை

Update: 2024-11-24 14:20 GMT

செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட 21-வது வார்டு டிபன்ஸ் காலனி 3-வது குறுக்குத் தெருவில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், ஒரு பகுதி சாலை ஏற்றத்துடனும், மற்றொரு பகுதி இறக்கமாகவும் போடப்பட்டுள்ளது. இதனால் மழை காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கிவிடுகிறது. அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சாலையை கடந்து செல்கின்றனர். அடிக்கடி விபத்தும் நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்