அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சன்விளையின் அய்யா வைகுண்டர் பதி உள்ளது. இந்த பதியின் அருகில் இருந்து அகஸ்தீஸ்வரத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. இதனால், மழை நேரங்களில் தண்ணீர் வடிந்தோட வழியில்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பாதசாரிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரத்தில் வடிகால் ஓடை அமைத்து மழைநீர் வடிந்தோட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-செல்வகுமார், ஈச்சன்விளை.