சாலை வசதி தேவை

Update: 2024-11-17 13:06 GMT

வெள்ளிச்சந்தையில் இருந்து 3½ கிலோமீட்டர் தொலைவில் வெள்ளிமலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. தினமும் இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆனால், மலையின் மேல் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், கோவிலுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், பக்தர்கள் நலன்கருதி மலை உச்சி வரை தார்ச்சாலை வசதி அமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கே.ஏ.நாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்