ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுப்புர கிராம பகுதிகளில் உள்ள தெருக்களின் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழை காலம் என்பதால் மழைநீர் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வாகனஓட்டிகள் கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.