சேதமடைந்த சாலை

Update: 2024-11-10 08:15 GMT

இடைக்கோடு பேரூராட்சியில் அண்டுகோடு-ஈந்திக்காலை,மலமாரி, குடுக்கச்சிவிளை ஆகிய கிராமங்களை இணைக்கும் உள்ளது. இந்த சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து பொிய பள்ளங்கள் ஏற்பட்டு மரண பள்ளத்துடன் காணப்படுகிறது. மேலும், மழை காலங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். இதனால், பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன்கருதி சேதமடைந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மனு எஸ்.குமார்,ஈந்திக்காலை.

மேலும் செய்திகள்