வத்தலக்குண்டுவில் இருந்து மதுரை செல்லும் சாலையில் உள்ள அரசு பள்ளி அருகில் இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அதிவேகமாக செல்வதால் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் சாலையை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே மீண்டும் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.