அருமநல்லூர் பகுதியில் இருந்து வீரவநல்லூர் செல்லும் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரம் அந்த வழியாக வேகமாக வரும் வாகன ஓட்டிகள் பள்ளத்தால் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.