வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-11-03 09:01 GMT

மருங்கூரில் இருந்து மயிலாடிக்கு செல்லும் சாலை சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பில் இருந்து சுசீந்திரம், ராஜாவூர் செல்லும் சாலையின் தொடக்கத்தில் வேகத்தடை அமைக்கப்படாமல் காணப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகளவு உள்ள இந்த பகுதியில் வேகமாக வரும் வாகனங்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பாதசாரிகள் நலன்கருதி சுசீந்திரம், ராஜாவூர் செல்லும் சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்