விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் வீரவாழியம்மன் கோவில் அருகே பாதாள சாக்கடை பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்தும் சாலை பள்ளம் சரியாக மூடப்படாததால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயநிலை உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.