சேறும்,சகதியுமான சாலை

Update: 2024-10-27 10:13 GMT

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதி வடுவூர் சாத்தனூர் கிராமம் வடக்கு அம்பலக்கார தெருவில் இருந்து ஆதிதிராவிடர் தெருவுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும்,குழியுமாக இருக்கிறது. மழைக்காலங்களில் பள்ளங்களில் மழைநீர் தேங்கி சாலை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் புதிதாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்