செங்கல்பட்டு மாவட்டம்,ஊரப்பாக்கம், ஜே.ஜே.சி. நகர் 4-வது தெரு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்கள் தினமும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு தங்கள் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர். ஆனால் இங்கு உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சிறிது மழை பெய்தாலே சாலைகள் மழைநீரில் மூழ்கி விடுகிறது. மேலும், மழைநீர் வெளியேறாமல் சில நாட்கள் அப்படியே தேங்கி விடுகிறது.இதனால் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதி அடைகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்து, வடிகால்வாய் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.