ராமநாதபுரம் மாவட்டம் யானைக்கால் வீதி, ஈசா பள்ளி வாசல் தெரு முக்கிய சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் அரசு பஸ்கள், மோட்டார்சைக்கிள், பாதசாரிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் வாகனஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா?