பெயர்ந்து கிடக்கும் சாலை

Update: 2024-10-20 10:32 GMT

கோவை அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் இருந்து சமத்துவபுரம் பகுதிக்கு செல்லும் சாலையானது பல இடங்களில் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது மழை பெய்து வருவதால், அந்த குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை அறியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த குழிகளில் தவறி விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர். மேலும் வாகனங்களும் பழுதாகி வருகிறது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்