விபத்து அபாயம்

Update: 2024-10-13 09:14 GMT

குழித்துறை பஸ்நிறுத்த சந்திப்பு பகுதி உள்ளது. இந்த பகுதி எப்போதும் வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பில் ரவுண்டானா அருகில் சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை நேரங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் நிரம்பி நிற்பதால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி அந்த பகுதியில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை விரைந்து சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்