கண்டன்விளையில் இருந்து வள்ளியாறு செல்லும் சாலையில் பருத்திவிளை உள்ளது. இந்த ஊரில் வளைவான பகுதியில் சாலையின் பக்கவாட்டில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் சாலையில் எதிரே கனரக வாகனங்கள் வரும்போது வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலையில் சேதமடைந்த பகுதியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.