செங்கல்பட்டு மாவட்டம், புனித தோமையார் மலை ஒன்றியம், கஸ்பாபுரம் குறிஞ்சித் தெருவில் மண்சாலை உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமான குண்டும் குழியுமாக உள்ளது. மழைக்காலத்தில் குழியில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்குகின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் இந்த சாலையை கடக்க மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண்சாலையை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.